Breaking News

🔴 நல்லூர் ஒன்றியம் மேமாத்தூர் கிராமத்தில் ரூ.12.61 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் – அடிக்கல் நாட்டு விழா

 

📍 இடம் : நல்லூர் ஒன்றியம், மேமாத்தூர்
🏗️ திட்டம் : மணிமுத்தாறு குறுக்கே உயர்மட்ட மேம்பாலம்
💰 மதிப்பீடு : ரூ.12 கோடியே 61 லட்சம்

🌉 நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்,
அண்ணன் மாண்புமிகு சி.வெ. கணேசன் அவர்கள்,

மற்றும்
கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர்,
உயர்திரு M.R.R. இராதாகிருஷ்ணன், M.L.A., அவர்கள் தலைமையில்,

நல்லூர் ஒன்றியம் மேமாத்தூர் கிராமத்திற்கு முன்பு செல்லும் மணிமுத்தாற்றின் குறுக்கே,
கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று,
ரூ.12 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.



இந்த மேம்பாலம் அமைக்கப்படுவதன் மூலம், மழைக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்து தடைகள் நீங்கி, மேமாத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

👥 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில்,

  • திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் பாவாடை கோவிந்தசாமி

  • விருத்தாசலம் தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் தி. வேல்முருகன்

  • ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வரதராஜபெருமாள்

  • வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், கொளஞ்சி

  • பொறியாளர் சுமதி

  • விருத்தாசலம் நகர தலைவர் ரஞ்சித்

  • முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நகர் சக்திவிநாயகம், ராஜரத்தினம்

  • மேமாத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை

  • ஞானவேல்

  • திமுக இளைஞரணி அமைப்பாளர் (நல்லூர்) தனசேகரன்

  • துணை அமைப்பாளர் நகர் பாபு

  • கிளை செயலாளர்கள் செந்தில், முருகேசன், பெருமாள், சுப்ரமணியன், லெனின்


உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சி, மக்களின் அடிப்படை வசதிகளுக்கான அரசின் முன்னுரிமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

✍️ செய்தியாளர் : R. காமராஜ்
📞 தொடர்பு : 9080215691

Rasi Palan

🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்

நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்..  பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும்  | தவறாமல் படிக்கவும் ⚡

🛒 புதிய தகவல் இதோ 👇

 

No comments

Thank you for your comments