Breaking News

ஆன்மீகமும், அறிவியலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்- மருத்துவர் சுதா.சேஷய்யன் பேச்சு


காஞ்சிபுரம், டிச.18:

ஆன்மீகமும்,அறிவியலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் மருத்துவர் சுதா.சேஷய்யன் வியாழக்கிழமை பேசினார்.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கல்லூரியில் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை அறக்கட்டளை சார்பில் ஆன்மீகமும்,அறிவியலும்}மகா பெரியவர் சுவாமிகள் வழியில் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் கலை.ராம.வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.தமிழ்த்துறைத் தலைவர் ஜெ.ராதா கிருஷ்ணன் வரவேற்றார்.

நிகழ்வில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் மருத்துவர் சுதா.சேஷய்யன் கலந்து கொண்டு ஆற்றிய சிறப்புரை.


ஆன்மீகமும், அறிவியலும் தனித்தனி வழித்தடங்கள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அறிவியல் இல்லையென்றால் ஆன்மீகம் இருக்க முடியாது.

ஆன்மீகம் இல்லையென்றால் அறிவியல் இருக்க முடியாது. அறிவியலும், ஆன்மீகமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். அறிவியல் என்பது ஸ்கியா என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல்.எதை, எப்படி செய்யலாம்,எப்படி செய்யக்கூடாது என்று விளக்குவது அறிவியல்.காரண,காரிய தொடர்பு ஒன்றை செய்வதற்கும் அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்வதற்கும் அறிவியல் உதவியாக இருக்கிறது.

மார்கழி மாதத்தில் தேசம் முழுவதும் ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாசுரத்தை பாடுகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும் திருப்பாவை,திருவெம்பாவை பாடுகிறார்கள்.


சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பாவை,திருவெம்பாவையின் மகத்துவத்தை மக்கள் அதிகம் அறியாமல் இருந்த நேரத்தில் இதன் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் மகா பெரியவர் சுவாமிகள்.

சங்கீத வித்வான்களை அழைத்து இவற்றுக்கு மெட்டுப்போட வைத்து இசையாக மாற்றி பாடச் சொன்னதால் திருப்பாவையும், திருவெம்பாவையும் உலகம் முழுவதும் பிரபலமானது.சிறு,சிறு புத்தகங்களாகவும் அச்சடித்து அனைவரும் படித்து பார்க்கவும், பாடவும் கொடுத்தார் மகா சுவாமிகள்.திருப்பாவையும், திருவெம்பாவையும் சமய ஒற்றுமையை கற்றுத் தருகின்றன.

ஆண்டாளின் திருப்பாவை பாசுரமான ஆழிமலைக் கண்ணா என்ற பாடலில் அறிவியலும்,ஆன்மீகம் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் விரிவாக விளக்கி பேசினார். 

தமிழ்த்துறை பேராசிரியர் தெய்வசிகாமணி நன்றி கூறினார். நிகழ்வில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் நவீன்குமார்சங்கரா பல்கலை தமிழ்ப் பேராசிரியை கவிதா உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிறைவாக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு நினைவுப்பரிசும், சான்றிதழையும் மருத்துவர் சுதா.சேஷய்யன் வழங்கினார்.


Rasi Palan

🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்

நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்..  பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும்  | தவறாமல் படிக்கவும் ⚡

🛒 புதிய தகவல் இதோ 👇

 

No comments

Thank you for your comments