Breaking News

காஞ்சியில் எம்.ஜி.ஆர் நினைவுநாள்: முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் அஞ்சலி - 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்!

 காஞ்சிபுரம் | டிசம்பர் 24, 2025

அஇஅதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 38-வது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் உணர்ச்சிப்பூர்வமாக அனுசரிக்கப்படுகிறது.

மலர் தூவி மரியாதை: 

இதனையொட்டி, காஞ்சிபுரம் கிழக்கு பகுதி கழகம் சார்பில் அன்னை இந்திரா காந்தி சாலை பகுதியில் பகுதி கழக செயலாளர் பாலாஜி ஏற்பாட்டில் சிறப்பு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் கலந்துகொண்டு, அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அன்னதானம் வழங்கல்: 

அஞ்சலி செலுத்திய பிறகு, அப்பகுதி பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் அன்னதானம் வழங்கினார். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்: 

இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், கழக கலை பிரிவு துணை செயலாளர் டில்லி பாபு, கைத்தறி பிரிவு துணை செயலாளர் யுவராஜ் மற்றும் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆர்.டி. சேகர் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பகுதி மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம், இளைஞர் அணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் எம்.ஜி.ஆரின் சாதனைகள் மற்றும் நினைவுகள் போற்றப்பட்டன.

No comments

Thank you for your comments