உத்திரமேரூரில் 1,000 பேர் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்! "பெயரை மாற்றாதே!" - சுந்தர் எம்.எல்.ஏ தலைமையில் பாஜக-விற்கு எதிராக முழக்கம்.
உத்திரமேரூர் | டிசம்பர் 25, 2025
சுந்தர் எம்.எல்.ஏ தலைமையில் திரண்ட கூட்டம்:
உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO Office) முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்குச் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் தலைமை தாங்கினார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- "மத்திய பாஜக அரசு அடாவடித்தனமாகப் பெயர் மாற்றம் செய்து வருகிறது. மகாத்மா காந்தி பெயரைத் திட்டத்திற்கு மீண்டும் சூட்ட வேண்டும்" எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
- ஏழை மக்களின் வாழ்வாதாரத் திட்டத்தில் தேவையற்ற குளறுபடிகளைச் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கூட்டணி கட்சிகள் பங்கேற்பு: இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக மாவட்ட செயலாளர் எழிலரசு, சமூக ஆர்வலர் குட்டி (எ) அறிவழகன், மதிமுக மாவட்ட செயலாளர் கருணாகரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய அணி நிர்வாகிகள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
No comments
Thank you for your comments