Breaking News

களத்தில் சிறுத்தைகள் – அம்பேத்கர் நினைவு நாளில் வீரவணக்கம்



புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் மற்றும் தலித்–இஸ்லாமியர் எழுச்சி நாளை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மேதகு எழுச்சித் தமிழர் அவர்களின் ஆணைக்கிணங்க, கடலூர் மைய மாவட்டம் விருத்தாசலத்தில் இன்று (டிசம்பர் 6) வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் அமைந்திருக்கும் அம்பேத்கர் சிலைக்கு, கடலூர் மைய மாவட்ட செயலாளர் பி.ஆர். நீதி வள்ளல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதற்கு முன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விருத்தாசலம் பஸ் நிலையம் அருகில் இருந்து கட்சிக்கொடியை ஏந்தி ஊர்வலமாக வந்து, சிலைக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். பின்னர், அனைவரும் உறுதிமொழி மேற்கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்டோர்

  • மண்டல துணை செயலாளர் ஐயாயிரம்
  • வழக்கறிஞர் காந்தி
  • நகர செயலாளர் மணலூர் முருகன்
  • ஒன்றிய செயலாளர்கள் சுப்பு ஜோதி, திருஞானம்
  • ஒன்றிய துணை செயலாளர் தென்றல்
  • வழக்கறிஞர்கள் தன்ராஜ், மதுசூதனன்
  • ஒன்றிய பொருளாளர்கள் எழில்வான்சிறப்பு, ஸ்டுடியோ சக்திவேல்
  • ஒன்றிய நிர்வாகி அய்யாதுரை
  • விஜயகுமார், துரைமுருகன், பாபுஜி, அருள்சுகன், குண. பாலாஜி, சிந்தனைச்செல்வன், சசிக்குமார், கண்ணன், தேவா
  • மங்கலம்பேட்டை பேரூராட்சி செயலாளர் விடுதலை அம்பேத்
  • பேரூராட்சி துணை செயலாளர் தன. குமார்
  • அகத்தியன்பாலா, வீரமணி, மேட்டுக்காலணி வீரமணி
  • நகர பொருளாளர் தோட்டா. தனசேகர், ராகுல், ரமணா, சூர்யா
  • பெரம்பலூர் வீரமணி
  • நகர துணை செயலாளர் வயலூர் இளங்கோவன்
  • வீரமணி, நாச்சியார்பேட்டை பாலு, பழனிச்சாமி, ஓட்டுநர் பாலு, இள. அறிவரசு
  • மகளிர் அணி உறுப்பினர்கள் 
    மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்.

  

📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)

🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!

















No comments

Thank you for your comments