விருத்தாசலத்தில் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் தொ.மு. சந்திரகுமார் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 70வது நினைவு தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள அண்ணலின் திருவுருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாநில பொதுச் செயலாளர் தொ.மு. சந்திரகுமார் தலைமையேற்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர்
- மாநில செயல் தலைவர் ப. பெருஞ்சித்திரன்
- மாநில செயற்குழு உறுப்பினர் பி.ஜெ. ஜெகதீசன்
- மாவட்ட துணைத் தலைவர் வீ. சிவக்குமார்
- மாவட்ட துணைச் செயலாளர் க. முருகேசன்
- தலைமையாசிரியர் பெ. ராஜேந்திரன்
- முதுகலை ஆசிரியர் சி. கனகராஜ்
- நல்லூர் ஒன்றிய செயலாளர் வீ. சத்தியமூர்த்தி
- விருத்தாசலம் ஒன்றிய துணைத் தலைவர் சாலமன்
- மாவட்ட நிர்வாகி குணசீலன்
- தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்க மறை மாவட்ட தலைவர் S. ராபர்ட் பெஞ்சமின்
- நிர்வாகிகள்: S.M.P. பழனிவேல், பொன்னிவளவன், ரமேஷ், பிரவீன்குமார், விஜயகுமார்
அனைவரும் இணைந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காக அவர் காட்டிய வழியை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினர்.
📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!
No comments
Thank you for your comments