Breaking News

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கருத்தரங்கம் ...!

கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட செயலாளர்கள் தொ.அ. ரவி, தளபதி முருகேசன் ஆகியோர முன்னிலை வகித்தனர்.



இந்நிகழ்ச்யில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்.முன்னதாக அமைச்சருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநகர் மாவட்ட தலைவர் துரை கதிரவன் அனைவரையும் வரவேற்று பேசினார்.



இந்நிகழ்ச்சியில் பேரவை தலைவர்கள் வாகை சந்திரசேகர், பேரவை துணை தலைவர் வாசு விக்ரம், போஸ் வெங்கட் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் , செந்தில்வேல் உட்பட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கருத்தரங்கம் குறித்து பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.



இந்நிகழ்ச்சியில் பொங்கலூர் பழனிச்சாமி, டாக்டர் மகேந்திரன் மற்றும் கழக மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



📝 செய்தியாளர்:லீலாகிருஷ்ணன்📱 99942 55455




No comments

Thank you for your comments