காஞ்சிபுரத்தில் மக்கள் நீதிமன்றம், ஒரே நாளில் 569 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.10.99 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது
காஞ்சிபுரம், டிச.13:
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றத்தின் தொடக்க விழா நடைபெற்றது. தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சுஜாதா தலைமை வகித்து பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான ஆணையினை வழங்கினார்.தலைமைக்குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகனகுமாரி,நீதிபதிகள் இனியா கருணாகரன், நவீன் துரைபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சட்டப்பணிகள் குழுவின் தலைவர் அருண்சபாபதி வரவேற்றார்.
நிகழ்வில் விபத்தில் உயிரிழந்த ஸ்ரீராமுலுவின் மனைவி சாந்தியின் குடும்பத்தினரிடம் இழப்பீட்டுத்தொகையாக ரூ.24,43,500 மற்றும் விபத்தில் உயிரிழந்த ஜாகீர்ஹூசேன் மனைவி அசீனாவிடம் ரூ.22,50,000 ஆகியனவற்றையும் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சுஜாதா வழங்கினார்.
மக்கள் நீதிமன்றம் 5 அமர்வுகளாக நடத்தப்பட்டு காஞ்சிபுரம் வட்டாரத்தைச் சேர்ந்த 2198 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இவற்றில் 569 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டுத் தொகையாக பயனாளிகளுக்கு ரூ.10,99,66,683 வழங்கப்பட்டது
வங்கி வழக்குகள் 1955 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 65 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அதன் மூலம் ரூ.49,58,100 தொகைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
நிகழ்வில் வழக்குரைஞர்கள் பத்மனாபன்,ஜான்,முரளி கிருஷ்ணன், துரைமுருகன், கிருஷ்ணமூர்த்தி உட்பட வழக்குரைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments