Breaking News

காஞ்சிபுரத்தில் டிச.19 முதல் டிச.29 வரை புத்தகத் திருவிழா - ஆட்சியர் தகவல்

காஞ்சிபுரம், டிச.12:

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்க விளையாட்டு மைதானத்தில் வரும் டிசம்பர் 19 ஆம் தேதியிலிருந்து டிச.29 ஆம் தேதி வரை 11 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி,கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் பதிப்பாசிரியர்கள் சங்கமும் இணைந்து 4 வது புத்தகத்திருவிழாவை நடத்தவுள்ளனர். 

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கூறியதாவது:-

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் 4 வது புத்கத் திருவிழா நடைபெறவுள்ளது.டிச.19 ஆம் தேதி தொடங்கி டிச.24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்புத்தக கண்காட்சி காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும்.

தென்னிந்தியா முழுவதுமிருந்து பல்வேறு பதிப்பாளர்கள்,புத்தக வெளியீட்டாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் 100க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள்,1000க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள்,லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன.

அறிவுப்பசிக்கு இப்புத்தக கண்காட்சி காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு ஒரு மாபெரும் விருந்தாக அமையும். புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில் சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துரைகள், சிந்தனையை தூண்டும் பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் ஆகியன இடம்பெறவுள்ளது.

பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவதுடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. புத்தக ஆர்வர்கள், பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.


Rasi Palan

🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்

நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்..  பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும்  | தவறாமல் படிக்கவும் ⚡

🛒 புதிய தகவல் இதோ 👇

 

No comments

Thank you for your comments