Breaking News

பள்ளி மாணவர்களின் கலைத் திறனை உயர்த்தும் திராவிட மாடல் அரசு — அங்கம்பாக்கம் நடுநி


காஞ்சிபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த அங்கம்பாக்கம் நடுநிலைப்பள்ளி மாணவ–மாணவிகள்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா 2025 நிகழ்வில் தங்கள் கலைத்திறனை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

வட்டார மற்றும் மாவட்ட மட்டங்களில் முதலிடம் பெற்றதன் அடிப்படையில்,
அவர்கள் மாநில மட்டத்தில் பங்கேற்பது பள்ளிக்கும் மாணவர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.


கலை, இலக்கியம், பண்பாடு ஆகிய துறைகளில் மாணவர்களின் திறனை வெளிப்படுத்த கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறந்த வாய்ப்புகளை வழங்கி வரும் திராவிட மாடல் அரசுக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

இதுவரை தொடர்ந்து நான்காவது ஆண்டாக அங்கம்பாக்கம் பள்ளி வட்டார-மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று மாநில மட்டத்தில் பங்கேற்று வருவது  நமது மாணவர்களின் திறமையையும் பள்ளியின் அர்ப்பணிப்பையும் தெளிவுபடுத்துகிறது.

No comments

Thank you for your comments