Breaking News

காஞ்சிபுரத்தில் சிறப்பு தீவிர திருத்தப் படிவங்கள் வீடு வீடாக சென்று சேகரிப்பு


காஞ்சிபுரம், நவ.30:

காஞ்சிபுரம் வட்டாரத்தில் பூர்த்தி செய்யப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் படிவங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 4.11.25 முதல் 4.12.25 ஆம் தேதி வரை சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.வாக்காளர்களிடம் வழங்கப்பட்ட படிவங்களை இறுதி நாளான டிசம்பர் 4 ஆம் தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்குமாறு ஆட்சியர் கலைச்செல்வி மோகனும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் வட்டாரத்தில் கோனேரிக்குப்பத்தில் இந்திரா நகரிலும்,சிறுகாவேரிப்பாக்கத்தில் சிவிஎம் நகரிலும் கணக்கெடுப்பு படிவங்களை பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்குமாறு காஞ்சிபுரம் வட்டாட்சியர் ரபீக் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தார்.

மேலும் இப்பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பு படிவங்களை வீடு,வீடாக சென்று சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

}சிறுகாவேரிப்பாக்கம் சிவிஎம் நகரில் கணக்கெடுப்பு படிவங்களை பெற்ற போது காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக் அலி நேரில் ஆய்வு செய்தார்.விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் இப்பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் ரபீக் கூறுகையில் காஞ்சிபுரம் வட்டாரத்தில் கணக்கெடுப்பு படிவங்கள் பெறும் பணி 90 சதவிகிதம் நிறைவு பெற்று விட்டது. 

மீதம் 10 சதவிகிதம் மட்டுமே உள்ளது.அவற்றையும் பெறுவதற்காக வீடு,வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை சேகரித்து வருகிறோம்.பொதுமக்களும் அரசுடன் முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

 .📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்! 

நல்ல பலன்களை அடைய என்ன செய்யவேண்டும்? பரிகாரம் என்ன?











No comments

Thank you for your comments