விருத்தாசலம் நாச்சியார்பேட்டை ரயில்வே கேட் ஆட்டோ மீது விழுந்த பரபரப்பு – உயிர் தப்பிய பயணிகள்
ரயில்வே கேட் திடீரென விழுந்த அதிர்ச்சி சம்பவம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில்வே சந்திப்பு அருகிலுள்ள நாச்சியார்பேட்டை பகுதியில் 24 மணி நேரமும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வரும் ரயில்வே கேட் அருகில் இன்று பரபரப்பு நிலவியது. தினமும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் இயங்கும் இந்த பகுதியில் பொதுமக்கள், மாணவர்கள், தனியார் பள்ளி–கல்லூரி வாகனங்கள் தொடர்ந்து செய்கிறார்கள்.
இரும்பு ரோப் அறுந்ததால் கேட் சாலைக்கு விழுந்தது
இன்று ரயில்கள் எதுவும் இயங்காத நேரத்தில் ரயில்வே கேட் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் கேட்டை திறந்து மூட பயன்படுத்தப்படும் இரும்பு ரோப் திடீரென அறுந்ததால், மேலிருந்து இருந்த முழுக் கேடும் சாலை மீது விழுந்தது.
அதே நேரத்தில் கேட்டை கடக்க முயன்ற ஆட்டோ மீது கேட் நேரடியாக விழுந்தது. இதனால் ஆட்டோ முன்புறம் சேதமடைந்தது. எனினும் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணிகள் அனைவரும் உயிர் தப்பி நிம்மதி நிலவியது.
பொதுமக்கள் உடனடியாக மீட்ட நடவடிக்கை
பராமரிப்பு புறக்கணிப்பா? – பொதுமக்கள் குற்றச்சாட்டு
உள்ளூர் மக்கள் கூறுகையில்:
- ரயில்வே கேட் மற்றும் ரோப் ஆகியவை முறையாக பராமரிக்கப்படாததால் இவ்வகை விபத்துகள் நடைபெறுகின்றன.
- இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க ரயில்வே உயர் அதிகாரிகள் வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில்வே போக்குவரத்தில் பாதிப்பு
ரயில்வே காவல்துறை மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!


No comments
Thank you for your comments