Breaking News

ஜன.6 ஆம் தேதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி,சேலை - அமைச்சர் ஆர்.காந்தி

காஞ்சிபுரம், டிச.23:

தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் ஜனவரி 6 ஆம் தேதிக்குள் இலவச வேட்டி சேலை வழங்கப்படும் என கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி கூட்டத்தின் நிறைவில் கூறியதாவது..

தமிழக அரசின் சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி,சேலை மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் ஆகியன ஆண்டு தோறும் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி,சேலை ஆகிய அனைத்தும் இம்மாதம் 15 ஆம் தேதியே வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

இதுவரை இல்லாத வகையில் 20 ஆண்டுகளில் முதல் முறையாக டிசம்பர் மாதமே அனைத்து வேட்டி,சேலைகளும் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் ஜனவரி 6 ஆம் தேதிக்கு முன்னதாகவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலை வழங்கப்படும் எனவும் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

2026-ம் ஆண்டு: குபேர யோகம் பெறப்போகும் ராசிகள் எவை | 2026 Career & Finance Horoscope|  @K24AstroTv 

No comments

Thank you for your comments