Breaking News

கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய 6 எலெக்டிரிக் கார்கள் - காஞ்சிபுரம் ஆட்சியரிடம் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் வழங்கியது


காஞ்சிபுரம், டிச.16:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய 6 எலெக்டிரிக் கார்களை ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் செவ்வாய்க்கிழமை வழங்கியது.



காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் பொது சுகாதாரத்துறைக்கு கிராமப்புறங்களில் சென்று மருத்துவக்குழுக்கள் மூலமாக மருத்துவ முகாம்களை நடத்துவதற்காகவும், அறுவைச் சிகிச்சை முடிந்த பின்னர் நோயாளிகளை அவரவர் வீடுகளுக்கு அழைத்து செல்லவும் 6 எலெக்டிரிக் கார்களை வழங்கியது. 


நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் ஹூ மின் ஹோ ரூ.85லட்சம் மதிப்பிலான 6 கார்களின் சாவிகளையும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் வழங்கினார்.



இதன் தொடர்ச்சியாக அதே நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து ரூ.70லட்சம் மதிப்பில் 5 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.


இந்நிகழ்வில் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனத்தின் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் எம்.கந்தன், மாவட்ட சுகாதார அலுவலர் த.ரா.செந்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் பு.விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




No comments

Thank you for your comments