மரபணுக்குறைபாடு உடைய பெண் குழந்தை,காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மருத்துவ உதவி கேட்ட தந்தை
காஞ்சிபுரம், டிச.16:
காஞ்சிபுரம் தாயார்குளம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த செல்வக்குமார்}சசிகலா தம்பதியருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு கௌசிகா என்ற பெண் குழந்தை பிறந்தது.
ஒரு வருடம் நலமுடன் இருந்த அப்பெண் குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிரமப்படுவதை அறிந்த பெற்றோர் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்கா சேர்த்துள்ளனர்.
குழந்தைக்கு மரபணு குறைபாடு உள்ளதாகவும்,தொடர்ந்து அதற்கான ஊசிகள் செலுத்தப்பட வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊசிக்கு ரூ.60 லட்சம் வரை தேவைப்படும் நிலையில் அரசு இலவசமாக அளித்து ஓரளவு மேம்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சையளிக்க இயலாத நிலையும் உள்ளது.பல்வேறு அமைப்புகள்,சமூக ஆர்வலர்களிடம் உதவியும் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் அரசின் சார்பில் தொடர்ந்து உரிய சிகிச்சையளிக்கப்பட வேண்டும் எனவும் இது குறித்து முதல்வருக்கு தெரிவிக்குமாறும் ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் குழந்தையின் தந்தை செல்வக்குமார் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்யுமாறும் ஆட்சியர் ஆலோசனை வழங்கினார்.
7 வயதுப் பெண் குழந்தை கௌசிகா உடல்நிலை காரணமாக 3 ஆம் வகுப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் தந்தை செல்வக்குமார் தெரிவித்தார்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇

No comments
Thank you for your comments