காஞ்சிபுரத்தில் 60 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் - ஆட்சியர் வழங்கினார்
காஞ்சிபுரம், டிச.22:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ச.ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பு.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 405 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை துறை சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பி உடனடியாக தீர்வு காணுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் 60 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.கூட்டத்தில் அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments