காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் லாபத்தொகை ரூ.21.44 லட்சம் வழங்கல்
காஞ்சிபுரம்,டிச.22:
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
2026-ம் ஆண்டு: குபேர யோகம் பெறப்போகும் ராசிகள் எவை | 2026 Career & Finance Horoscope|
இக்கூட்டத்துக்கு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர் தலைமை வகித்து கூட்டுறவு ஒன்றியத்தின் வளர்ச்சிக்காக ரூ.21,44,430 க்கான காசோலையை கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் கோ.யோகவிஷ்ணுவிடம் வழங்கினார்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் பணித்திறனாய்வு,அனைத்து கடன்களின் வருடாந்திர குறியீடு அடையத் தேவையான அறிவுரைகளையும் மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர் வழங்கினார்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் பார்த்தசாரதி,மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் எல்.விஜயகுமார், பெரியகாஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளர் வா.சரவணன், உதவிப் பொதுமேலாளர் சசிக்குமார், காஞ்சிபுரம் கூட்டுறவு ஒன்றிய சார்பதிவாளர் ந.பிரேம்குமார் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நிறைவாக கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாக மேலாளர் வி.முரளி நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments