காஞ்சிபுரத்தில் எஸ்ஐ பணிக்கான எழுத்துத்தேர்வு - 2604 பேர் எழுதினர்
காஞ்சிபுரம், டிச.21:
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காவல் துணை ஆய்வாளர்களுக்கான எழுத்துத்தேர்வு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கல்லூரி,ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மற்றும் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 3902 பேர் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களில் 1298 பேர் வராததால் 2604 பேர் எழுதினார்கள்.
தேர்வுமையத்துக்கு வந்த தேர்வர்களை தேர்வு விதிகளை முறையாக பின்பற்றுமாறும்,அடையாள அட்டை, தேர்வுக்கான அனுமதிச்சீட்டு ஆகியனவற்றை காவல்துறையினர் சோதனை செய்து தேர்வு மையத்துக்கு உள்ளே அனுப்பி வைத்தனர்.
எழுத்துத்தேர்வு நடைபெறுவதை காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தேர்வு மையங்களில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உட்பட போதுமான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
No comments
Thank you for your comments