காஞ்சிபுரத்தில் 31 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.ஆட்சியர்
காஞ்சிபுரம், டிச.12:
காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் தொடர்பான விழா ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.எம்எல்ஏக்கள் க.சுந்தர்,எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் 720 மகளிர்க்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கி பேசுகையில்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக மொத்தம் 66267 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதில் உரிமைத்தொகை பெறுவதற்காக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 31 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன், காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக்அலி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர்,மகளிர் திட்ட இயக்குநர் மு.பிச்சாண்டி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்எஸ்.சுகுமார் ஆகியோர் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி,திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களால் பயனடைந்த மக்கள் குறித்த குறும்படம் ஆகியனவும் திரையிட்டுக் காட்டப்பட்டது.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇

No comments
Thank you for your comments