Breaking News

1.5 டன் டன் எடை கொண்ட ஐஸ் கட்டிகளை மார்பு பகுதியில் வைத்து உடைத்து தற்காப்பு கலை குறித்து வீரர்களுக்கு விழிப்புணர்வு

 



1.5 டன் டன் எடை கொண்ட ஐஸ் கட்டிகளை மார்பு பகுதியில் வைத்து உடைத்து தற்காப்பு கலை குறித்து வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கராத்தே வீரர் நூர் முகமது.

திறமையை விட தன்னம்பிக்கையே வீரர்களுக்கு தேவை எனவும், தோல்விகளால் மனம் தளர வேண்டாம் என அர்ஜுனா விருது பெற்ற வீரர் தேவராஜன் காஞ்சிபுரம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


சின்ன காஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் காரேத்தே  பயிற்சி பள்ளி சார்பில் பயின்ற 500 காரேத்தே வீரர்களுக்கான பயிற்சி நிறைவு பட்டை வழங்கும் விழா காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பள்ளியின் தலைமை பயிற்சியாளர் நூர் முகமது தலைமையில் நடைபெற்றது. 

இதில் ஒலிம்பிக் வீரரும்,  தென்னக ரயில்வேயில் விளையாட்டு பிரிவு அலுவலரும், அர்ஜுனா விருது பெற்ற வீரர் திரு வி தேவராஜ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி நிறைவு பெற்று தேர்வு கண்ட 500 வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு பிரிவு பெல்ட் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். 

விழாவில் பேசியபோது, விளையாட்டு வீரர்களுக்கு திறமையை விட தன்னம்பிக்கையே அதிகம் தேவை எனவும் அதுவே வெற்றிக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் தோல்வி கண்ட வீரர்களை அவரது பெற்றோர்கள் ஊக்குவித்து வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 



இதனைத் தொடர்ந்து பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளர் சென்சாய். நூர் முகமது 150 கிலோ எடை கொண்ட பத்து ஐஸ் கட்டிகளை ஒன்றன்பின் ஒன்றாக தனது மார்பில் வைத்து உடைத்து அனைவரது வரவேற்பையும் பெற்று,  தற்காப்பு கலை  குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வேலம்மாள் பள்ளியின் முதல்வர் சுரேஷ்குமார் உள்ளிட்ட  காஞ்சிபுரம் நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Rasi Palan

🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்

நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்..  பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும்  | தவறாமல் படிக்கவும் ⚡

🛒 புதிய தகவல் இதோ 👇

 

No comments

Thank you for your comments