காஞ்சிபுரத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
படவிளக்கம்: பயனாளிக்கு தையல் இயந்திரம் வழங்குகிறார் உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர்
காஞ்சிபுரம், டிச.8:
காஞ்சிபுரம் சீனிவாசா மேல்நிலைப்பள்ளி அருகில் திமுக மாநில வர்த்தக அணியின் சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கட்சியின் மாவட்ட செயலாளரும்,உத்தரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்விற்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், திமுக மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில வர்த்தக அணியின் துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
நிகழ்வில் ஒரு மிதிவண்டி, 3 பேருக்கு தையல் இயந்திரங்கள்,10 பேருக்கு தலா ரூ.1000 உதவித்தொகை, 10 பேருக்கு இலவசமாக புடவைகள்,30க்கும் மேற்பட்டோருக்கு அரிசி மூட்டைகள், இருவருக் கிரிக்கெட் விளையாட்டுப் பொருட்கள் ஆகியனவற்றை கட்சியின் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான க.சுந்தர் வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சுப்பராயன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.மாமன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡

No comments
Thank you for your comments