Breaking News

காஞ்சிபுரத்தில் 71 பழங்குடியின மக்களுக்கு குடும்ப அட்டைகள் - ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்



காஞ்சிபுரம், டிச.8:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் 71 பழங்குடியின மக்களுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளை திங்கள்கிழமை நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன்,மாவட்ட வழங்கல் அலுவலர் பு.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 208 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விரைந்து தீர்வு காணுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.


இதனைத் தொடர்ந்து வாலாஜாபாத்தில் வசிக்கும் 58 குடும்பங்கள் மற்றும் ஸ்ரீ பெரும்புதூரில் வசித்து வரும் 13 குடும்பங்கள் உட்பட மொத்தம் 71 பழங்குடியின மக்களுக்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் குடும்ப அட்டைகளை வழங்கினார்.குறை தீர்க்கும் கூட்டத்தில் அரசின் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Rasi Palan

🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்

நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்..  பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும்  | தவறாமல் படிக்கவும் ⚡

🛒 புதிய தகவல் இதோ 👇

 .

No comments

Thank you for your comments