காஞ்சிபுரத்தில் 1327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
காஞ்சிபுரம், டிச.7:
காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் டாக்டர்.அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.
எம்பி க.செல்வம்,எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த டாக்டர்.அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து ஆட்சியர்,எம்பி,எம்எல்ஏக்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 309 பயனாளிகளுக்கு ரூ.83 ஆயிரம், மகளிர் திட்டம் சார்பில் 60 பயனாளிகளுக்கு ரூ.67.17 லட்சம், தாட்கோ சார்பில் 272 பயனாளிகளுக்கு ரூ.267.15 லட்சம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 534 பயனாளிகளுக்கு ரூ.1497.84 லட்சம், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 45 பயனாளிகளுக்கு ரூ.228.15 லட்சம்,கூட்டுறவுத்துறை சார்பில் 44 பயனாளிகளுக்கு ரூ.66.82 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன், சார் ஆட்சியர் ஆஷிக்அலி,மகளிர் திட்ட இயக்குநர் மு.பிச்சாண்டி, மாவட்ட ஊராட்சிக்குழுவின் துணைத் தலைவர் நித்தியா சுகுமார், ஒன்றியக் குழுவியன் தலைவர் மலர்க்கொடி குமார் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,பொதுமக்கள், பலரும் கலந்து கொண்டனர்
.
No comments
Thank you for your comments