Breaking News

காஞ்சிபுரத்தில் புத்தகத் திருவிழா தொடங்கியது,அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்



காஞ்சிபுரம், டிச.19:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் புத்தகத் திருவிழாவை கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி வெள்ளிக்கிழமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

 


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் 4 வது புத்தகத் திருவிழா ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை  தலைவர் நித்யா சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதன்மைக்கல்வி அலுவலர் நளினி வரவேற்றார். தென்னிந்திய பதிப்பாசிரியர் சங்க செயலாளர் வைரவன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.

கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி புத்தகத் திருவிழாவை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் த.ரா.செந்தில் எழுதிய பதறுங்கள்,பயப்படாதீர்கள் என்ற நூலையும்,மருந்தாளுநர் பழனி வேலன் எழுதிய சர்க்கரை நோயா பயப்படாதீர்கள் என்ற இரு மருத்துவ நூல்களையும் அமைச்சர் வெளியிட்டார்.

புத்தகத் திருவிழாவையொட்டி தென்னிந்தியா முழுவதுமிருந்து பல்வேறு பதிப்பாளர்கள்,புத்தக வெளியீட்டாளர்கள் 100க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளை அமைத்திருந்தனர்.1000க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.


புத்தக கண்காட்சியில் முதல் அறையில் அறநிலையத்துறை சார்பில் ஆன்மீகப் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.ஏகாம்பரநாதர் கோயில் மூலவர் உருவ உற்சவர் சிலை அனைவரையும் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாடு,மயில், ஒயில், சிலம்பாட்டம், பரத நாட்டியம்,நாதசுவர இன்னிசைக்கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன. மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன் நன்றி கூறினார்.

புத்தகத் திருவிழா வரும் 29 ஆம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெறுகிறது.தினசரி காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

தினசரி மாலையில் சிறப்பு பேச்சாளர்களின் கருத்துரைகளும் இடம்பெறுகின்றன.

புத்தத் திருவிழா தொடக்க விழாவில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, அறநிலையத்துறை இணை ஆணையர் சி.குமரதுரை,பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் சோமசுந்தரம் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், ஒன்றிய குழுத் தலைவர்கள் ஆர்.கே.தேவேந்திரன், மலர்க்கொடி குமார் உள்ளிட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், 

திமுகவை சார்ந்த காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி.கே.வி.தமிழ்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், சேகர், குமார், பகுதி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் , புத்தகம் வாசிப்பவர்கள்,பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments