காஞ்சிபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி
காஞ்சிபுரம், நவ.11:
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரும் 1.1.26 ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி இம்மாதம் 4 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி வரை ஒரு மாதம் கணக்கெடுப்பு பணியும் நடைபெற்று வருகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியினை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகன், மகளிர் திட்ட இயக்குநர் மு.பிச்சாண்டி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)சு.ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
No comments
Thank you for your comments