தேவரியம்பாக்கத்தில் கைப்பேசி விழிப்புணர்வு முகாம்
காஞ்சிபுரம்,நவ.11:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் கைப்பேசி பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார்.ரெனாலட் நிஷான் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு அலுவலர் யுவராணி,கிராம சேவைத்திட்ட இணை இயக்குநர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர் திருச்செல்வி பங்கேற்று பேசுகையில் கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள், இணையப் பாதுகாப்பு,சமூக வலை தளங்களில் தவறான தகவல்கள் வெளிவருதல் ஆகியன குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.
விழிப்புணர்வு முகாமில் மாணவர்கள்,இளைஞர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
No comments
Thank you for your comments