Breaking News

SIR திருத்தத்துக்கு எதிராக காஞ்சிபுரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம்:

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தீவிர வாக்காளர் திருத்தம் (SIR) மூலம் வாக்காளர்களின் உரிமைகளை பறிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி, இந்திய தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி (இந்தியா) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

நிகழ்விற்கு திமுக மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்.எல்.ஏ தலைமையேற்றார்.  மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்புரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய தலைவர்கள்

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்:

  • த. வேல்முருகன் எம்.எல்.ஏ. (தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்)
  • மல்லிகா தயாளன் (மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர்)
  • க. செல்வம் எம்.பி. (காஞ்சிபுரம் தொகுதி)
  • எழிலரசன் எம்.எல்.ஏ. (வக்கீல், காஞ்சிபுரம் தொகுதி)
  • மகாலட்சுமி யுவராஜ் (காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்)
  • குமரகுருநாதன் (துணை மேயர்)

மேலும், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஜி. சுகுமாரன், வி. எஸ். ராமகிருஷ்ணன், சுந்தரவரதன், அப்துல் மாலிக், மாவட்ட நிர்வாகிகள் இனியரசு, கோகுலகண்ணன், மலர்விழி, சன் பிராண்ட் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்.எஸ். சுகுமார், ஆர்.டி. அரசு, டி.ஆர். நாராயணன், ஆர். அப்பாதுரை, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பி. சீனிவாசன், எஸ். சிகாமணி, வே. ஏழுமலை, கே. ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


திராவிட கழகம் சார்பில் ஏ.வி. முரளி சிதம்பரநாதன், பொன்மாறன், ஏ. செல்வம்,

காங்கிரஸ் சார்பில் எஸ். சீனிவாசராகவன், எஸ். நாதன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தி.வ. எழிலரசு, மதிஆதவன், மூ. தமிழினி, பொன்னிவளவன், ஆ. பாலாஜி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜி. ராமகிருஷ்ணன், கே. சாமிநாதன், இ. முத்துக்குமார், கே. நேரு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.வி. சீனிவாசன், பா. கார்த்திக், ராஜ்குமார், வீராசாமி,
மதிமுக சார்பில் ஜி. கருணாகரன், பி. சுகுமார், குமரேசன், ஏகாம்பரம்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கே.ஜே. நரேஷ்,
முஸ்லிம் லீக் சார்பில் அல்லா பாஷா, அசலாம் பாஷா,
மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து தாஜுதீன், ஷாஜகான், முன்னா, ஜாபர்கான்,
மக்கள் நீதி மையம் சார்பில் த. கண்ணன் தீனன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேல்முருகன் எம்.எல்.ஏ. பேச்சு

ஆர்ப்பாட்டம் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் த. வேல்முருகன் அவர்கள் கூறியதாவது:

“தேர்தல் ஆணையத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, பாஜக அரசு இஸ்லாமியர் மற்றும் முஸ்லிம் வாக்குகளை பறிக்க முயற்சி செய்கிறது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையாக கண்டிக்கிறது,” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

“வடமாநில மக்கள் தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக வரலாம், ஆனால் தமிழக அரசியலில் யார் பங்கேற்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நிலையை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்குகிறது. இதனை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். தற்போது தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேற்பட்ட வடமாநில மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கி வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

“இந்திய பாதுகாப்பு எல்லைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலையில், பாஜக அரசு உள்நாட்டு வாக்குகளை அபகரிக்க SIR திருத்தத்தில் கவனம் செலுத்துகிறது. இதனால் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. டெல்லியில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பு இதன் விளைவாகும்,” என அவர் சாடினார்.


📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

 

No comments

Thank you for your comments