விருத்தாசலத்தில் ரேஷன் கடை அரிசி திருட்டு வீடியோ வைரல் – பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ரேஷன் கடைக்கான அரிசி மூட்டைகளை லாரியில் திருடும் ஊழியர் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் (TNCSC) மூலம், கூட்டுறவு வேளாண்மை தொடக்க சங்கத்தின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் — அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்றவை — கொண்டு செல்லப்படுகின்றன.
ஒவ்வொரு மூட்டையும் 50.580 கிலோ எடையில் வழங்கப்பட வேண்டும். ஆனால், பொதுமக்களுக்கு செல்லும் போது எடை குறைவாக, 43 முதல் 45 கிலோ மட்டுமே வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கு காரணமாக, விருத்தாசலம் பெரியார் நகர் கூட்டுறவு வேளாண்மை தொடக்க சங்கத்தில் நகர்வு பணி in-charge ஆக பணிபுரியும் சங்கர் என்பவர் கூறப்பட்டுள்ளார். இவர் லாரிகளில் பொருட்களை ஏற்றிச் செல்லும் போது, சில மூட்டைகளை குறைத்து வெளிசந்தையில் விற்பனை செய்து அமோக லாபம் பார்க்கிறார் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் நியாய விலைக் கடை ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அத்துடன், “இவரை பணி இடமாற்றம் செய்து, உடனடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்” என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது விருத்தாசலத்தில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
No comments
Thank you for your comments