Breaking News

இரண்டாக உடைந்த கனரக லாரி - போக்குவரத்து கடும் பாதிப்பு: அரசு துறையின் அலட்சியம் வெளிச்சம்!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழைய ரயில்வே நிலையத்தில் சரக்கு முனையமானது செயல்பட்டு வருகிறது. இம்முனையத்தில் சரக்கு ரயில்கள் மூலமாக சரக்கு மற்றும் சேவை பொருட்களானது இறக்குமதி செய்யப்பட்டு கண்டெய்னர் லாரி, கனரக லாரிகள் மூலம் பல்வேறு தொழிற்சாலை உள்ளிட்டவைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.


இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் சென்னையில் உள்ள தொழிற்சாலை ஒன்றிற்கு இரும்பு தகடுகளான ஸ்டீல் ரோல்களை  இறக்குமதி செய்வதற்காக இம்முனையத்தில் இறக்கப்பட்ட பின் அவ் ஸ்டீல் ரோல்களை நீலமான கனரக கண்டெய்னர் லாரி ஒன்றில் ஏற்றப்பட்டு அவ் லாரியானது புறப்பட்ட நிலையில் 

திடீரென எடை பலு தாங்க முடியாமல் அவ்லாரியானது சரி பாதியாக உடைந்து காஞ்சிபுரம்- வையாவூர் சாலையில் இரயில்வே கேட் அருகாமையிலேயே சாலையில் நின்றது. 

இதனால் காஞ்சிபுரத்திலிருந்து வையாவூர் செல்லக்கூடிய சாலை இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் 

லாரியில் இருந்த ஸ்டீல் உருளைகளை ஜே சி பி கிரேன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி லாரியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு பல மணி நேரங்களுக்கு பிறகு போக்குவரத்தை சீர் செய்தனர்.

⚠️அலட்சியமான அரசு துறை செயல்பாடுகள் – காரணமா?

இத்தகைய நிகழ்வுகளுக்கு முக்கிய காரணம் சீர்கெட்ட அரசு துறை செயல்பாடுகள் தான் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

விதிமுறைகளை மீறி அதிக எடை ஏற்றுதல், நடவடிக்கை எடுக்க வேண்டிய சுங்க சாவடிகளில் சுயலாபத்திற்காக லஞ்சம் பெற்று வாகனங்களை அனுமதித்தல்,  இவை எல்லாம் இப்படியான விபத்துகளுக்கே வழிவகுக்கின்றன.

மேலும், உடையும் நிலையில் உள்ள கனரக வாகனங்கள் சாலையில் இயங்குவது, ஆர்டிஓ (RTO) அலுவலகங்களின் செயல்பாடு குறித்து பெரும் கேள்வி எழுப்புகிறது.

ஒவ்வொரு வாகனத்திற்கும் Fitness Certificate (FC) வழங்கப்படும் போதிலும், அதன் தரம் மற்றும் பரிசோதனையின் நம்பகத்தன்மை மீதான நம்பிக்கை சிதைந்துள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை:

சுங்க சாவடிகள், RTO அலுவலகங்கள் மற்றும் சரக்கு முனையங்களில் கடுமையான கண்காணிப்பு மற்றும் வெளிப்படையான நடவடிக்கை அவசியம். இல்லையெனில் இத்தகைய விபத்துகள் மீண்டும் மீண்டும் நடந்து உயிர் மற்றும் பொருள் இழப்பை ஏற்படுத்தும் அபாயம் நீடிக்கும்.













 

No comments

Thank you for your comments