விருத்தாசலம் அருகே கோவில் உண்டியல் உடைப்பு — 4 பேர் கைது
விருத்தாசலம் அருகே உள்ள ஆலடி ஏரிக்கரை அய்யனார் கோவிலின் உண்டியல் உடைத்து பணம் மற்றும் பித்தளை பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 2ஆம் தேதி, மர்ம நபர்கள் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பித்தளை மணி மற்றும் பித்தளை பொருட்களை திருடிச் சென்றனர்.
புகார் மற்றும் விசாரணை :
இந்த திருட்டு சம்பவம் குறித்து கோவில் பூசாரி ரமேஷ் ஆலடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆலடி காவல்துறையினர் மூன்று நாட்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
எதிரிகள் கைது :
நேற்று மாலை ஆலடி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நான்கு நபர்கள் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தனர்.
ஊர் பொதுமக்கள் அவர்களை பிடித்து விசாரித்தபோது, திருட்டில் ஈடுபட்டது வெளிச்சத்துக்குவந்தது.
ஆலடி காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள்:
- சுரேஷ்
- சங்கர்
- பரமசிவம்
- முருகன்
இவர்கள் பாலகொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.
பறிமுதல் & தொடர்ந்த விசாரணை :
போலீசார் அவர்களிடமிருந்து 37 கிலோ எடையுள்ள பித்தளை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியதுடன், ஆலடி காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments
Thank you for your comments