விருத்தாசலத்தில் கலைஞர் அறிவுசார் மையம் அடிக்கல் நாட்டு விழா 🎉
இந்த விழா நகர மன்ற தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
🏗️ திட்ட மதிப்பு: சுமார் ₹1 கோடியே 92 லட்சம்
🏢 இடம்: விருத்தாசலம் 4-வது வார்டு, நாச்சியார்பேட்டை
இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் காஞ்சனா, நகர செயலாளர் தண்டபாணி, நகர துணை செயலாளர் ராமு, ஒன்றிய செயலாளர் வேல்முருகன், வயலூர் கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோ பாண்டியன், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், 4-வது வார்டு கவுன்சிலர் முத்துக்குமரன் உள்ளிட்ட நகரமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
🎊 இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் “கலைஞர் அறிவுசார் மையம்” விருத்தாசலத்தின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்குப் பெரும் பங்காற்றும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments