உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்!
புதுடெல்லி:
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. இதில் 52 ரன்களில் வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி. இந்த வெற்றியை தேசமே கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை அன்று இந்திய அணி வீராங்கனைகள், தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார், பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் ஆகியோர் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தனர்.
இந்திய அணியினருடன் இறுதிப் போட்டி குறித்து பிரதமர் மோடி உரையாடி உள்ள. ஹர்மன்பிரீத் மற்றும் அமன்ஜோத் கவுர் பிடித்த கேட்ச் குறித்து பிரதமர் மோடி, இந்திய மகளிர் அணியினருடன் உரையாடியதாக தகவல்.
இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடிக்கு ‘நமோ’ என பெயருடன் கூடிய இந்திய அணியின் ஜெர்ஸியை வீராங்கனைகள் வழங்கினர். அதில் அணியினர் அனைவரும் கையொப்பமிட்டு இருந்தனர்.

No comments
Thank you for your comments