காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியது
காஞ்சிபுரம், நவ.4:
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள வரும் 1.1.2026 ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நவ.4 ஆம் தேதி முதல் டிச.4 வரை ஒரு மாதத்திற்கு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய வாக்களர்களுக்கு வாக்காளர் கணக்கெடுப்பு படிவும் வழங்கும் பணிகள் தொடங்கியது.
காஞ்சிபுரத்தில் சார் ஆட்சியர் ஆஷிக் அலி புதுப்பாளையம் தெருவில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தைக் கொடுத்து பணிகளை தொடங்கி வைத்ததுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுக்கும் படிவம் வழங்கும் பணியை ஆய்வு செய்தார்.ஆய்வின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் கோட்டாட்சியர் சி.பாலாஜி,உத்தரமேரூரில் மாவட்ட வழங்கல் அலுவலர் ப.விஜயகுமார், ஆலந்தூர் மாநகராட்சியில் மண்டல அலுவலர் எஸ்.முருகதாஸ் ஆகியோர் அந்தந்த பகுதியில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தினை வாக்காளர்களுக்கு வழங்கி கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கி வைத்ததாகவும் ஆட்சியர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
No comments
Thank you for your comments