Breaking News

வேப்பூரில் சாய் அப்போலோ நர்சிங் கல்லூரியில் உலக நீரிழிவு தின சிறப்பு முகாம்


கடலூர் :

கடலூர் மாவட்டம் வேப்பூரில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, சாய் அப்போலோ நர்சிங் கல்லூரியின் முதன்மை கல்வி அலுவலர் ஆனந்த ஜோதி தலைமையில் இலவச நீரிழிவு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.


இம்முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோய் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. 

மேலும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது, சரியான உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து டாக்டர் சுதாகர், டாக்டர் காயத்திரி மற்றும் கல்லூரி இணை இயக்குனர் பிரியாங்கா ஆகியோர் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.


நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் கட்டுப்பாடு முக்கியமென்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ–மாணவிகள் இணைந்து முகாமில் பங்கேற்று, முகாமை சிறப்பித்தனர். பல பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற்றனர்.

 

📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)


No comments

Thank you for your comments