Breaking News

ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 60வது ஆண்டு விளையாட்டு விழா..!

கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 60-வது ஆண்டு விளையாட்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது பள்ளியின் முதல்வர் ஸ்ரீமதி ஜி பங்கஜ் விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று பேசினார்.



முன்னதாக சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ரோட்டரி சங்க நிர்வாகி வழக்குரைஞர் சுந்தர வடிவேலு மற்றும் பள்ளியின் தலைவர் ஸ்ரீ மஹாவீர் போத்ரா ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கினர் அதனைத் தொடர்ந்து விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் தேசிய கொடியையும் பள்ளியின் துணைத்தலைவர் ஸ்ரீ கமலேஷ் பாப்பனா மற்றும் பள்ளியின் இணைப்பொருளாளர் நிஷாந்த் ஜெயின் ஆகியோர் நலச் சங்க கொடியையும் எஸ் என் வி குளோபல் பள்ளியின் முதல்வர் சாம்சன் மற்றும் எஸ்.என்.வி பள்ளி முதல்வர் ஸ்ரீமதி ஜி.பங்கஜ் ஆகியோர் பள்ளியின் கொடியையும் ஏற்றி மரியாதை செலுத்தினர்.



பின்னர் மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டனர் இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மாணவ மாணவியர்களின் யோகா,இசைக்குழு அணிவகுப்பு,கூட்டு உடற்பயிற்சி, கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதை கண்டு ரசித்தனர் நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மற்றும் பள்ளியின் தலைவர் ஆகியோர் மாணவ மாணவியர்களின் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

 

செய்தியாளர்: லீலாகிருஷ்ணன் – 📱99942 55455

 .📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 




















No comments

Thank you for your comments