Breaking News

தமிழ்நாடு சுற்றுச்சூழல் நீர்நிலை நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!


 விருத்தாசலம்:

தமிழ்நாடு சுற்றுச்சூழல் நீர்நிலை நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் தடயம் பாபு தலைமையில் விருத்தாசலத்தில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். கடலூர் மாவட்ட துணைத் தலைவர் பி. சபாநாயகம் முன்னிலை வகித்தார்.

மருத்துவம் மற்றும் பொதுநல தீர்மானங்கள்

கூட்டத்தில்,

  • விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர்கள், செவிலியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
  • அங்கு இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நிர்வாக குறைபாடுகள் குறித்து நடவடிக்கை கோரிக்கை

விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் சேர்ந்த பிரிவு உதவியாளர் திரு. பழனிவேல் அவர்கள் பொதுமக்களை அலட்சியப்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டதால், அவரை இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

நேர்மையான அதிகாரிகளுக்கு பாராட்டு

லஞ்சம் பரவி வரும் சூழ்நிலையில்,

  • பொதுமக்களுக்கு நேர்மையாக பணியாற்றும் வட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனுசுயா அவர்களுக்கும்,
  • கிளைச் சிறை கண்காணிப்பாளர் திரு. வி. விக்னேஷ் அவர்களுக்கும் செயற்குழு சார்பாக பாராட்டு வழங்கப்பட்டது.

விருத்தாசலம் மாவட்ட கோரிக்கை

தமிழக அரசு, பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கடலூர் மாவட்டத்தை பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு

டிசம்பர் 24 – தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் முன்னிட்டு, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்

  • துண்டறிக்கை அச்சிட்டு வழங்குதல்,
  • விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் என்று முடிவு செய்யப்பட்டது.


சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு

பூதாமூர் சிஎன்சி நகர், ஆர்.கே.நகர், சிதம்பரம் சாலை ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் தற்போது பூதாமூர் ஏனாதி மேடு காந்தி ரோட்டில் தேங்கி நிற்பதால் தொற்று நோய் அபாயம் உருவாகியுள்ளது.
இதனைத் தடுக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை நீர் ஓட்டத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

மேலும்,

  • கடலூர் சாலையில் உள்ள 4.70 சென்ட் முல்லா ஏரி மற்றும்
  • அதன் எதிரே உள்ள 1.25 சென்ட் தாங்கல் குட்டை ஆகியவற்றையும் தூர்வாரி பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டது.

கலந்து கொண்டோர்

இக்கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் கே. லோகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் த. செந்தில், பி. பொன்னன், என். பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், மாநிலத் துணைத் தலைவர் வேணுகோபால் நன்றி கூறினார்.




No comments

Thank you for your comments