பட்டா குறிச்சி - கண்டமத்தான் சாலையில் பாலம் அமைக்காததால் போராட்டம்: 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம்!
கடலூர் மாவட்டம்:
அவர்கள் கூறியதாவது:
"ஓடைப் பகுதியின் குறுக்கே பாலம் இல்லாமல் சாலை அமைத்தால், மழைக்காலங்களில் தண்ணீர் நெருக்கடி ஏற்பட்டு சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால் தற்போது வளர்ந்து வரும் மக்காச்சோள பயிர் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது," என விவசாயிகள் தெரிவித்தனர்.
பலமுறை கோரிக்கை வைத்து நிர்வாகம் புறக்கணிப்பு
இந்தச் சாலை பணி தொடங்குவதற்கு முன்பே, அப்பகுதி விவசாயிகள் பாலம் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர். இருப்பினும், அதிகாரிகள் இதை புறக்கணித்து நேரடியாக தார் சாலை அமைப்பைத் தொடங்கியுள்ளனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:
"கடந்த காலங்களில் சிறிய மழைக்கே சாலை உடைந்து தண்ணீர் ஆர்ப்பரித்துச் சென்றது. இப்போது பாலம் இல்லாமல் மீண்டும் சாலை அமைக்கப்படுமானால், மழைக்காலங்களில் சாலை உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உருவாகும்," என தெரிவித்தனர்.
அரசு நடவடிக்கை கோரிக்கை
விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சார்பாக,
-
ஓடைப்பகுதியில் சிறு பாலம் அமைக்க,
-
மழைநீர் வெளியேறும் வழியை உறுதிசெய்ய,
-
சாலை பணியைத் தற்காலிகமாக நிறுத்தி திட்ட திருத்தம் மேற்கொள்ள,மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
போராட்ட எச்சரிக்கை
அவர்கள் மேலும் எச்சரித்துள்ளனர்:
“அதிகாரிகள் பாலம் அமைக்காமல் சாலை பணியைத் தொடர்ந்தால், மாபெரும் போராட்டம் நடத்தி பணியை தடுத்து நிறுத்துவோம். விவசாய நிலங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும்” என தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments