Breaking News

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் டிவிஎஸ் ஆர்பிட்டர் மின்சார வாகனம் அறிமுகம்...!

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் டிவிஎஸ் ஆர்பிட்டர் மின்சார வாகனத்தை டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ஈ.வி பிசினஸ் டிஜிஎம் ரிஷீ குமார் அறிமுகம் செய்து மின்சார வாகனம் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தார்.


டிவிஎஸ் மின்சார வாகனம் ஆர்பிட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தாலே 158 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் எனவும் க்ரூஸ் கண்ட்ரோல்,34 லிட்டர் பூட் ஸ்பேஸ்,ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.இதன் விலை 1,03,100 ரூபாய் மற்றும் எக்ஸ்-ஷோரூம்,பி.என் இ-டிரைவ் திட்டம் உட்பட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டிவிஎஸ் ஆர்பிட்டர் மின்சார வானம் 5-க்கும் மேற்பட்ட கண்கவர் வண்ணங்களிலும் 3.1 கிலோ வாட் லித்தியம் பேட்டரி மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.செயல் திறன் மற்றும் வாகனத்தை கட்டுப்படுத்த பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455






















No comments

Thank you for your comments