விருத்தாசலத்தில் தமிழ்நாடு ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கம் துவக்கவிழா சிறப்பாக நடைபெற்றது!
விருத்தாசலம்:
விழா கௌரவ தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. இதில் தலைவர் செல்வம், செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் சுதாகர், கௌரவ தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் தீர்மானங்கள்
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
- தமிழ்நாடு முழுவதும் ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கத்தில் அதிகளவில் உறுப்பினர்களை சேர்த்தல்.
- அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் கிளைகளை அமைத்தல்.
- சங்க உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணைத்தல்,
- இதன் மூலம் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு படிப்பு உதவித்தொகை உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை பெறுதல்.
- மாதாந்திர கூட்டம் நடத்தி உறுப்பினர்களின் குறைகளை கேட்டு தீர்வு காணல்.
- உறுப்பினர் சந்தா தொகையை நேரம் தவறாது செலுத்துதல்.
- நிதியை அதிகரித்து உறுப்பினர்கள் நலனுக்காக பயன்படுத்துதல்.
- அனைத்து உறுப்பினர்களும் பாதுகாப்பாக மற்றும் ஒற்றுமையாக செயல்படுதல்.
- கட்டணங்களையும் உறுப்பினர் விதிமுறைகளையும் ஒரே சீராக வைத்திருத்தல்.
மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
மேலும், விருத்தாசலம் கிளை தலைவர் செல்வம், செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் சுதாகர், கௌரவத் தலைவர் குணசேகரன், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, செங்கல்பட்டு, தென் சென்னை, விழுப்புரம், திருச்சி, சேலம், மயிலாடுதுறை, கடலூர், விருத்தாசலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பல்வேறு சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
No comments
Thank you for your comments