மக்காச்சோளப் பயிர்களை டிராக்டரால் அழித்த விவசாயிகள் – மழை பாதிப்பால் வேளாண் இழப்பீடு கோரி காத்திருப்பு!
கடலூர் :
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனர்.
ஆனால், வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்ததால், பயிர்கள் வேரூன்றி வளர வேண்டிய நேரத்தில் அதிகமான மழை பெய்து பயிர்கள் வளர்ச்சி குன்றி சேதமடைந்துள்ளன.
விவசாயிகளின் துயரம்
இழப்பீடு கோரி வேளாண் துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மழையால் சேதமடைந்த தங்களது மக்காச்சோளப் பயிர்களை டிராக்டரை கொண்டு தாங்களே அழிக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்தாண்டு காப்பீட்டு தொகையும் வரவில்லை
மேலும், கடந்தாண்டு மக்காச்சோளப் பயிருக்கு காப்பீட்டு தொகை செலுத்திய விவசாயிகளுக்கும் இதுவரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாற்றுப் பயிர் முயற்சி
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அகற்றி, மாற்றுப் பயிர் செய்வதற்கான முயற்சிகளை மங்களூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாரிகளின் பதில்
🎙️ பேட்டி: பெரியசாமி, விவசாயி – மங்களூர்
📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)

No comments
Thank you for your comments