காஞ்சிபுரம் கோயில்களில் கனடா முதியோர்கள் தரிசனம்
காஞ்சிபுரம், நவ.4:
கனடா நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள் 18 பேர் அந்நாட்டின் முதியோர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் ரிவார்ட்ஸ் டிராவல்ஸ் எனும் நிறுவனத்தின் உதவியுடன் காஞ்சிபுரம் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.
இவர்களை கேரளாவிலிருந்து சுற்றுலா வழிகாட்டி விகேஷ் என்பவர் அழைத்து வந்திருந்து கோயில்களின் சிறப்புகள் மற்றும் கட்டிடக்கலை ஆகியன குறித்து விளக்கினார்.
இந்தியாவில் ஜெய்ப்பூர், உதய்ப்பூர், புதுதில்லி, ஆக்ரா ஆகிய பகுதிகளுக்கு சென்றோம். தற்போது காஞ்சிபுரம் வந்திருந்து கோயில்களை பார்வையிட்டோம். ஏகாம்பரநாதர் கோயில், கைலாசநாதர் கோயில்களில் இதுவரை சுவாமி தரிசனம் செய்தோம்.
கோயில்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், தூண்கள் இவையனைத்தும் வியப்பாக இருக்கிறது.
தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியன குறித்தும் தெரிந்து கொண்டோம் என்றனர்.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
No comments
Thank you for your comments