Breaking News

வையாவூரில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் - எம்எல்ஏ க.சுந்தர் வழங்கினார்



காஞ்சிபுரம், நவ.30:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றிய திமுக சார்பில் வையாவூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் படுநெல்லிபாபு ஏற்பாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் ஆகியன வழங்கும் விழா நடைபெற்றது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களது 49 வது பிறந்த நாளையொட்டி 49 தூய்மைப்பணியாளர்களுக்கு மளிகைப் பொருட்களும், 49 அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்க்கு நோட்டுப்புத்தகங்களையும் உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் வழங்கினார்.

இந்நிகழ்வில் எம்பி க.செல்வம்,எம்எல்ஏ எழிலரசன் ஆகியோரும் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். முன்னதாக துணை முதலமைச்சரின் பிறந்த நாளையொட்டி பிரம்மாண்ட கேக் ஒன்றும் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருள்முருகன் உட்பட திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

  .📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்! 

நல்ல பலன்களை அடைய என்ன செய்யவேண்டும்? பரிகாரம் என்ன?













No comments

Thank you for your comments