காஞ்சிபுரத்தில் கூட்டுறவு சார்பதிவாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி
காஞ்சிபுரம், நவ.11:
காஞ்சிபுரம் மாவட்டம் உட்பட 12 மாவட்டங்களில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர் பயிற்சி முகாமிற்கு தலைமை வகித்து பயிற்சியின் நோக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய வருகை ஆகியன குறித்து விரிவாக விளக்கி பேசினார்.
பயிற்சி முகாமிற்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கான காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் கோ.யோகவிஷ்ணு முன்னிலை வகித்தார்.
பயிற்சி முகாமில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளர்,முதன்மை வருவாய் அலுவலர், பொது மேலாளர், பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
No comments
Thank you for your comments