Breaking News

காஞ்சிபுரத்தில் விஜயநகரப் பேரரசு கால சதிக்கல் சிற்பம் கண்டெடுப்பு


காஞ்சிபுரம், நவ.6:

காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டை பகுதியில் வரலாற்று ஆய்வாளர்கள் வியாழக்கிழமை நடத்திய கள ஆய்வில் விஜயநகர பேரரசு கால சதிக்கல் சிற்பம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.


காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர், வரலாற்று ஆய்வாளர் அன்பழகன் நத்தப்பேட்டை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது அவர்கள் முகங்கள் சிதைந்த நிலையில் உள்ள விஜயநகர பேரரரசு கால சதிக்கல் சிற்பம் ஒன்றைய கண்டெடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் இருவரும் கூறியது. 

இச்சிற்பமானது நடுக்கற்கள் வகையை சேர்ந்த சதிக்கல் எனப்படும் சிற்பமாகும்.அகலம் 25 செ.மீ, உயரம் 38 செ.மீ. தெற்கு திசை நோக்கி காணப்படும் இச்சிற்பத்தில் ஆண், பெண் என இரு உருவங்கள் உள்ளன.இரு உருவங்களும் வணங்கும் நிலையில் கைகைகளை கூப்பியவாறு நின்ற நிலையில் காணப்படுகின்றன.


பட்டாடை உடுத்திய நிலையிலும், தோள், மார்பு பகுதிகளில் அணிகலன்களோடும் காணப்படுகின்றன. இருவரது காதுகளிலும் மிகப்பெரிய அணிகலன்கள் காணப்படுவது இச்சிற்பத்தின் சிறப்பம்சம். சிற்பத்தில் உள்ள இருவரின் முகங்களும் தோய்ந்த  நிலையில் உள்ளது.

இருவரது தலையிலும் கொண்டை அமைப்பு இருப்பதால் இது இனக்குழு தலைவருக்கான சதிகல் நடுக்கல்லாக இருக்கலாம். இச்சிற்பம் விஜயநகர பேரரசு காலமான 16 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகவும் இருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.



No comments

Thank you for your comments