காஞ்சிபுரத்தில் ரூ.3.20 கோடி மதிப்பில் முதல்வர் படைப்பகம் அமைக்க பூமி பூஜை-அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்
காஞ்சிபுரம், நவ.5:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியகாஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த உப்பேரிக்குளத்தில் நிகழாண்டு கல்வி நிதியில் நகராட்சி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 7846 சதுர அடி நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய முதல்வர் படைப்பகம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய முதல்வப் படைப்பகம் அரசு ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக நடைபெற்ற பூமி பூஜையின் போது கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்வில் எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன், காஞ்சிபுரம் மாநகர திமுக செயலாளர் சிகேயு தமிழ்ச்செல்வன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
No comments
Thank you for your comments