காஞ்சிபுரத்தில் சாலைவசதி கேட்டு பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்
காஞ்சிபுரம், நவ.7:
காஞ்சிபுரம் மாநகராட்சி 22 வது வார்டு பகுதியான எம்.ஜி.சக்கரபாணி சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.மேலும் இப்பகுதியில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் சாலை வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மாமன்ற உறுப்பினரும், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயருமான குமரகுரு நாதனிடம் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை தெரிவித்தும் பலன் இல்லை.
தொடர்மழை காரணமாகவும் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சேருடன் நீரும் சேர்ந்து அப்பகுதியை விளைநிலம் போல காணப்படுகிறது.
எம்ஜி சக்கரபாணி தெருவில் வசிப்போர், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் சாலையில் நடக்கக்கூட முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி சாலையை கடந்து வருகின்றனர்.
எனவே இப்பகுதியில் சாலை வசதி அமைத்து தரக்கோரி அத்தெருவாசிகள் இணைந்து நாற்று நடும் போராட்டத்தை நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீஸôர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதையடுதது போராட்டம் கைவிடப்பட்டது.
No comments
Thank you for your comments