காஞ்சிபுரத்தில் விதிமீறிய 159 வாகனங்கள், ரூ.13.61 லட்சம் அபராதத்தொகை வசூலிப்பு
காஞ்சிபுரம், நவ.7:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளிலும் உத்தரமேரூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் சிவராஜ் ஆகியோர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
கடந்த அக்டோபர் மாதம் நடத்திய வாகன தணிக்கையில் 159 வாகனங்கள் அரசு விதிகளை மீறியதாக கண்டறியப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ரூ.13,61,444 அபராத தொகையாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் கூறுகையில்,
அதிகபாரம் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனங்கள்,தகுதிச்சான்று புதுப்பிக்காதவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், சரக்கு வாகனங்களில் தார்ப்பாய் போட்டு மூடாதவர்கள், வரி செலுத்தாதவர்கள், அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை உபயோகப்படுத்தியவர்கள் என பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 159 வாகனங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தொடரும் எனவும் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.13,61,444 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments