Breaking News

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மீது பாமக ராமதாஸ் அணியினர் புகார்


 காஞ்சிபுரம் :

சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் மீது தாக்கதல் நடத்தியவர்களையும், அவருக்கு துணையாக இருந்து வரும் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட பாமக (ராமதாஸ் பிரிவு) புகார் மனு அளித்துள்ளனர்.

காஞ்சிபுரம் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்டசல் செயலராக மலையாங்குளம் ஸ்ரீதர் என்பவரை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி தலைமையிலான பாமகவினர் ஏற்கனவே இருக்கும் மாவட்டச் செயலர் மகேஷ்குமார் தொடர்வார் என்று அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாமக (ராமதாஸ் பிரிவு) மாவட்டச் செயலர் மலையாங்குளம் ஸ்ரீதர் தலைமையிலான பாமகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தனர். 

அவர்கள் சேலம் மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் அருள் மீது தாக்தல் நடத்தியதை சுட்டிக்காட்டி இதுபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாமகவினர் மீது தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற அன்புமணி தலைமையிலான குழுவினர் திட்டமிடுவதாகவும், சமூக வலைதளங்களில் பாமகவினரை இழிவுபடுத்தி எழுதி வருவதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். இதில் மாவட்ட தலைவர் அண்ணன் வீ.சேஷாத்ரி மற்றும்  காஞ்சி  கிழக்குமாவட்ட செயளாலர் எச்சூர் அ.சுரேஷ் தலைவர் சுரேஷ்.

📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 



No comments

Thank you for your comments