Breaking News

காஞ்சிபுரத்தில் பிற்படுத்தப்பட்டோர் கடன் வழங்கும் மனுக்கள் குறித்து பரிசீலனை

காஞ்சிபுரம், நவ.5:

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பிற்படுத்தப் பட்டோர் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் நோக்கில் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுடன் அதிகாரிகள் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பித்தவர்களின் கடன் மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.காஞ்சிபுரம் கூட்டுறவுச் சங்க மண்டல இணைப்பதிவாளர் கோ.யோகவிஷ்ணு தலைமையிலான அதிகாரிகள் குழுவினரால் நடத்தப்பட்டது.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சு.பார்த்தசாரதி,மகளிர் திட்ட அலுவலர் பிச்சாண்டி, காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளர் சரவணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பி.எஸ்.வெங்கடேசன், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் உதவிப் பொது மேலாளர் கந்தசாமி ஆகியோர் குறைந்த வட்டிக்கு கடன் பெற விண்ணப்பித்த கடன் மனுக்களை பரிசீலனை செய்தனர்.

📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 



No comments

Thank you for your comments