விருத்தாசலம் கஸ்பா டேனிஷ் மிஷன் பள்ளி தலைமையாசிரியர் மாற்றம் – பெற்றோர்கள், மாணவர்கள் சாலை மறியல்!
அவர் 2021ஆம் ஆண்டு இப்பள்ளியில் சேரும் போது மாணவர் எண்ணிக்கை 54 மட்டுமே இருந்தது.
தனது சொந்த முயற்சியிலும் செலவிலும் வேன் மூலம் வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்ததன் மூலம் தற்போது 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் கல்வி பெற்று வருகின்றனர்.
🔹 சேவைச் சாதனைகள்:
தனது சொந்த செலவில் பள்ளியில்
- கழிப்பறை வசதி,
- மின்விசிறிகள்,
- ஸ்மார்ட் கிளாஸ் ரூம்
- அமைத்ததோடு,
- காலை உணவு திட்டத்தையும் பள்ளிக்காக பெற்றுத் தந்துள்ளார்.
🔹 மாற்று முடிவு:
சமீபத்தில் A.L.C. நிர்வாகம் தேர்தல் நடைபெற்று, புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தலைமையாசிரியர் கிடியன் எபினேசர் பாக்கியராஜ் பணி மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
🔹 பெற்றோர் மற்றும் மாணவர்களின் எதிர்ப்பு:
இந்த முடிவுக்கு எதிராக, பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து “தலைமை ஆசிரியரை மாற்றக் கூடாது” என முழக்கங்களிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர், நூற்றுக்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் – காட்டுக்கூடலூர் சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
🔹 காவல்துறை நடவடிக்கை:
தகவல் அறிந்த விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
No comments
Thank you for your comments